அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற பா.ஜ., தீர்மானம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வடமதுரையில் இருந்து கீரணத்தம் வரை, நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தீர்மானம் நிறைவேற்றியது.துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பானு மோகன் உள்ளிட்டோர்

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வடமதுரையில் இருந்து கீரணத்தம் வரை, நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தீர்மானம் நிறைவேற்றியது.துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பானு மோகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியை, பொது மக்களுக்கு வழங்குவதில் ஆளுங்கட்சி செய்யும் குழப்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தீபாவளி வரை மத்திய அரசு சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருள் திட்டத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.அசோகபுரத்தில் கட்டப்பட உள்ள மேம்பாலம், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கட்ட வேண்டும். இப்பகுதியில் உள்ள கவுசிகா நதியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் முத்துக்குமார், கனகராஜ், பாலமுரளி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X