அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் சமுதாய தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு,வன்னியர் சமுதாய தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.பா.ம.க., தலைவர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர், முதல்வரை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.முதல்வரை சந்தித்த பின், ஜி.கே.மணி அளித்த பேட்டி:பிப்., 26ம் தேதி சட்டசபையில், அன்றைய
 வன்னியர் சமுதாய தலைவர்கள்  முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை:வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு,வன்னியர் சமுதாய தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பா.ம.க., தலைவர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர், முதல்வரை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.முதல்வரை சந்தித்த பின், ஜி.கே.மணி அளித்த பேட்டி:பிப்., 26ம் தேதி சட்டசபையில், அன்றைய முதல்வர் பழனிசாமியால் சட்டமாக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு நடைமுறை நிலுவையில் இருந்தது.

அதுபற்றி சட்டசபையில் பேசினோம். அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார். பொறியியல் கல்லுாரிகளுக்கான, விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கிய நிலையில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற ஆணையை வழங்கி உள்ளார். இது,வரவேற்கத்தக்கது.

முதல்வருக்கு பா.ம.க., சார்பில், வன்னியர் சங்கம் சார்பில் நன்றி. மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இல்லையேல் மாநில அரசு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல, வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பு தலைவர் நாகரத்தினம், செயலர்ஆர்.ஏ.ஆர்.கே., சத்திரியர் ஆகியோரும், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X