சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வதில் சிக்கல்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பரிசோதனை செய்ய நவீன மையம் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது கண்டறியப்பட்டுள்ளது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆவதற்கு முன்பே இங்கு ரூ.1.50

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பரிசோதனை செய்ய நவீன மையம் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது கண்டறியப்பட்டுள்ளது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆவதற்கு முன்பே இங்கு ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட இருந்த நவீன டெங்கு பரிசோதனை மையத்தை பரமக்குடிக்கு மாற்றியுள்ளனர்.பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு பாதிப்பு இல்லாத நிலையில், இந்த பரிசோதனை மையம் பெரும்பாலும் செயல்படாத நிலையில் தான் உள்ளது.

தற்போது, ராமேஸ்வரம் பகுதி மக்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு வந்தால் பரமக்குடிக்கு செல்லுமாறு அனுப்பப்படுகின்றனர். பலர் முறையான பரிசோதனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X