பொது செய்தி

தமிழ்நாடு

அப்பாடா... திறந்தாச்சு நூலகம்: வரலாறு படிக்க... படைக்க...

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:இரண்டரை மாதங்களுக்கு பின், நுாலகங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, வாசகர்கள் ஆர்வமுடன் வந்து, செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை படித்து வருகின்றனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு நுாலகங்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம், 10ம் தேதி நுாலகங்கள் மூடப்பட்டன. இரண்டரை மாதங்களுக்கு பின், கடந்த 24ம் தேதி நுாலகங்கள் திறக்கப்பட்டன.
 அப்பாடா... திறந்தாச்சு நூலகம்: வரலாறு படிக்க... படைக்க...

மேட்டுப்பாளையம்:இரண்டரை மாதங்களுக்கு பின், நுாலகங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, வாசகர்கள் ஆர்வமுடன் வந்து, செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை படித்து வருகின்றனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு நுாலகங்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம், 10ம் தேதி நுாலகங்கள் மூடப்பட்டன. இரண்டரை மாதங்களுக்கு பின், கடந்த 24ம் தேதி நுாலகங்கள் திறக்கப்பட்டன. வீட்டிலேயே முடங்கிக் கிடந்த வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், ஆர்வமுடன் நுாலகத்துக்கு வந்து செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள், கதை புத்தகங்களை படித்து வருகின்றனர்.வாசகர்களிடம் கேட்டபோது, 'கொரோனா பிரச்னையால் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த எங்களுக்கு, நுாலகம் திறக்கப்பட்டது, மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை அல்லது மாலையில் ஓய்வு நேரங்களில், நுாலகத்துக்கு வந்து, செய்தித்தாள்கள் வாயிலாக நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்வதோடு, கதை புத்தகங்களை படித்து வருகிறோம்' என்றனர்.காரமடை கிளை நுாலக அலுவலர் கீதா கூறுகையில், ''காரமடை கிளை நுாலகம், காலை, 9:00 மணியிலிருந்து, மதியம், 12:30 மணி வரையும், மாலை 4:30ல் இருந்து 7:00 மணி வரையும் திறந்து வைக்கப்படுகிறது. 49 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 6,000ம் உறுப்பினர்களும், 25 புரவலர்களும் உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அதிகளவில் வந்து படிக்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X