பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி பட்டத்துக்காக... 'சோளம் வெதைக்கையிலே...!' பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சோளம் விதைக்க,நிலத்தை உழும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் நன்கு ஈரத்துடன் இருப்பதால், சோளம் விதைக்க விவசாயிகள் நிலத்தை உழும் பணியில், தீவிரம் காட்டி
 ஆடி பட்டத்துக்காக... 'சோளம் வெதைக்கையிலே...!' பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்ப்பு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சோளம் விதைக்க,நிலத்தை உழும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் நன்கு ஈரத்துடன் இருப்பதால், சோளம் விதைக்க விவசாயிகள் நிலத்தை உழும் பணியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால், மானாவாரி எனப்படும், கோ.எஸ். 30 என்ற சோள ரகத்தை பயிரிட, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் வயது, 120 நாட்கள்.இதில், கதிர்கள் நன்றாக பிடிப்பதால், பயிரில் இருந்து அதிகளவு சோளம் கிடைக்கும். அதே நேரத்தில், கால்நடைகளுக்கு தேவையான சோளத்தட்டை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் இதை அதிகளவு பயிரிட முன் வருகிறோம். தற்போது பெய்த மழையால், மண்ணில் ஓரளவு ஈரப்பதம் உள்ளது. அக்., மாதத்துக்கு பின், வடகிழக்கு பருவமழை, கோவையின் வடக்குப் பகுதியில் நன்றாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், மானாவாரியான சோள விளைச்சலுக்கு அந்த மழை, உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறியதாவது:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நடப்பாண்டு சோளம் பயிரிட, கே.12 ரகம் பரிந்துரை செய்யப்படுகிறது. கோ.எஸ்.30 என்ற ரகமும், விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இது மற்ற பயிர்களை போல, 160 நாட்கள் நீடிக்காமல், 120 நாட்களில் முழுமையான வளர்ச்சியை பெற்று விடுகிறது. நன்றாக கதிர் பிடிப்பதுடன், கால்நடைகளும், தட்டுகளை விரும்பி உண்ணுகின்றன. இந்த ரகம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நன்றாக வளர, ஊட்டமேற்றிய தொழு உரம் இடலாம். ஒரு வண்டி தொழு உரம், 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், 25 கிலோ யூரியா மற்றும் உயிர் உரங்கள் கலந்து, 30 நாட்கள் நிழலில் குவியலாக, தென்னை ஓலைகளைக் கொண்டு மூடி வைப்பதால், தரமான ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க முடியும். இதை மானாவாரி பயிரான சோளத்துக்கு இடுவதால், மகசூல் நன்றாக இருக்கும்.விவசாயத்துக்கு தேவையான, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேளாண் இடுபொருட்கள் தேவையான அளவு பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் இருப்பில் உள்ளது. இதை மானிய விலையில் பெற்று, விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு, வேளாண் துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X