பொது செய்தி

தமிழ்நாடு

600 தொழிற்கல்வி ஆசிரியர்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
மதுரை : 'தமிழகத்தில் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என கல்வி அமைச்சர் மகேஷிடம் தமிழ்நாடு அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி ஆசிரியர்கள் நல சங்கம் நிர்வாகிகள் அமைச்சரிடம் அளித்த மனு விவரம்: சென்னை, கோவை,

மதுரை : 'தமிழகத்தில் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என கல்வி அமைச்சர் மகேஷிடம் தமிழ்நாடு அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி ஆசிரியர்கள் நல சங்கம் நிர்வாகிகள் அமைச்சரிடம் அளித்த மனு விவரம்: சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மாநகராட்சியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநில அளவில் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி இப்பாடத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.அரசு பள்ளிகள் போல் மாநகராட்சி பள்ளிகளுக்கு ஹைடெக் ஆய்வகங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மாநகராட்சிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணிவரன்முறை செய்து புதிய பாடப் பிரிவுகள் துவங்கி கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.நிர்வாகிகள் ஜனார்த்தனன், ஜோசப் ஜெயசீலன், ரங்கராஜன், முருகன், சுப்பிரமணியகுமார், பாலு லூயிஸ் பிரபாகரன், வின்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X