அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதி வருகையை ஒட்டி சட்டசபை வளாகம் புதுப்பிப்பு

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஜனாதிபதி வருகையை ஒட்டி, தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழக சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, உருவப்படம் திறப்பு விழா, ஆக., 2 மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது.கவர்னர் பங்கேற்பு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், படத்தை திறந்து வைக்க உள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.விழாவிற்கான

சென்னை:ஜனாதிபதி வருகையை ஒட்டி, தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழக சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, உருவப்படம் திறப்பு விழா, ஆக., 2 மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது.கவர்னர் பங்கேற்பு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், படத்தை திறந்து வைக்க உள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, சட்டசபை செயலக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விழாவை ஒட்டி தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், தலைமை செயலக ஊழியர்களுக்கு, விடுப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.


ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும், விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அறையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சபாநாயகர்அப்பாவு, அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகள் குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-202110:02:15 IST Report Abuse
Matt P ஸ்டாலின் அப்பா படத்தை சட்டசபையில் தொறக்க போறீங்களா? அவரு தான் ஜனாதிபதி ஆக முடியலை ...அவரு படத்தையாவது தொறக்குறீங்களே. நல்லயிருங்கப்பா/ ..சட்டசபையில் ஸ்டாலின் துராய் எல்லாம் கண்ணீர் வடிச்சு அன்னிக்கு தரை நனையப்போவுது....அன்னிக்கு எல்லோரும் கலிஞ்சர் வாழ்க என்று சத்தமா கூவனும். ...ஸ்டாலின் குடும்பமே சட்டசபைக்கு போகுமா இருக்கும் பட தொறப்புன்னா சும்மாவா? அவர்களுக்கே இரு நூறு நாற்காலி வேணுமே. ..உறுப்பினர்களெல்லாம் வெளியேநின்னு தொலைக்காட்சியிலா பாப்பாங்களா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X