ஜனாதிபதி வருகையை ஒட்டி சட்டசபை வளாகம் புதுப்பிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதி வருகையை ஒட்டி சட்டசபை வளாகம் புதுப்பிப்பு

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:ஜனாதிபதி வருகையை ஒட்டி, தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழக சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, உருவப்படம் திறப்பு விழா, ஆக., 2 மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது.கவர்னர் பங்கேற்பு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், படத்தை திறந்து வைக்க உள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.விழாவிற்கான

சென்னை:ஜனாதிபதி வருகையை ஒட்டி, தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழக சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, உருவப்படம் திறப்பு விழா, ஆக., 2 மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது.கவர்னர் பங்கேற்பு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், படத்தை திறந்து வைக்க உள்ளார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, சட்டசபை செயலக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விழாவை ஒட்டி தமிழக சட்டசபையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், தலைமை செயலக ஊழியர்களுக்கு, விடுப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.


ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும், விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அறையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சபாநாயகர்அப்பாவு, அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகள் குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X