இடிந்த சாக்கடையால் தொற்று பரவும் அபாயம்

Added : ஜூலை 27, 2021 | |
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இடிந்த சாக்கடையால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வீதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள சாக்கடை, சில மாதங்களுக்கு முன்பு இடிந்தது. இதனால் நரசிம்மநாயக்கன்பாளையம் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இடிந்த சாக்கடையால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வீதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள சாக்கடை, சில மாதங்களுக்கு முன்பு இடிந்தது. இதனால் நரசிம்மநாயக்கன்பாளையம் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர், இடிந்து விழுந்த சாக்கடையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கொசுக்கள் பெருகி, தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'இடிந்து விழுந்த சாக்கடை இடிபாடுகளை அகற்றக்கோரி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் பெருகி, டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை இடிபாடுகளை உடனடியாக அகற்ற, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X