- நமது நிருபர் -
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் குழாய்களுக்கு, முன்வைப்பு தொகை வசூலிக்க வேண்டும் என, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஜல் ஜீவன் திட்டத்தில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளை முறையாக பராமரிப்பதற்கு, புதிய வங்கி கணக்குகளை துவக்க வேண்டும் என, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வங்கிக் கணக்கில், குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் முன்வைப்பு தொகையாக, பயனாளிகள் பங்களிப்பு பணம் செலுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதில், பழங்குடியினத்தவர்களுக்கு கட்டணம் இன்றியும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தோருக்கு 750 ரூபாயும், இதர பிரிவினருக்கு, 1,500 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, ஊராட்சிகளில் 10 வங்கி கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. தற்போது, ஒரு வங்கி கணக்கு கூடுதலாக துவக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE