பொது செய்தி

தமிழ்நாடு

அந்த 'சத்தம்' கேட்டு ரொம்ப நாள் ஆச்சு! பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுாரில் உள்ள வார சந்தை மற்றும் கால்நடை சந்தை ஆகியவற்றை மீண்டும் நடத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் கால்நடை சந்தையாக துடியலுார் சந்தை திகழ்ந்தது. வாரந்தோறும், திங்கட்கிழமை நடத்தப்படும். இங்கு பசுமாடுகள்
 அந்த 'சத்தம்' கேட்டு ரொம்ப நாள் ஆச்சு! பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

பெ.நா.பாளையம்:துடியலுாரில் உள்ள வார சந்தை மற்றும் கால்நடை சந்தை ஆகியவற்றை மீண்டும் நடத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் கால்நடை சந்தையாக துடியலுார் சந்தை திகழ்ந்தது. வாரந்தோறும், திங்கட்கிழமை நடத்தப்படும். இங்கு பசுமாடுகள் மட்டுமல்லாமல் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளும், விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேட்டுப்பாளையம், காரமடை, கோவில்பாளையம், சின்னதடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கலந்து கொள்வர்.இப்பகுதியில் மேய்ச்சல் நிலம் குறைவு மற்றும் பசுமாடுகள் வளர்ப்பு கட்டுப்படியாகாத நிலையில், பலர் கால்நடை வளர்ப்பை கைவிட்டனர். இருந்தாலும், துடியலுார் கால்நடை சந்தையில், வாரம்தோறும் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கால்நடைகள் விற்பனையாகி வந்தன. தமிழகம் முழுக்க, கடந்த மே, 10 முதல், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கால்நடை சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல, இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை நடத்தப்படும் வார சந்தைக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:வாரச்சந்தையில் காய்கறி, மளிகை பொருட்கள் மட்டுமல்லாமல், வீட்டுக்கு தேவையான பல அத்தியாவசிய பொருட்களை, இப்பகுதியில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன் அடைந்தனர். இதேபோல, கால்நடை சந்தை இல்லாததால், வளர்ந்த ஆடு, மாடுகளை விற்பனை செய்வதில் கால்நடை வளர்ப்போர் சிரமப்பட்டு வருகின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாவட்ட நிர்வாகம், துடியலுார் வார சந்தை மற்றும் கால்நடை சந்தை ஆகியவற்றை மீண்டும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X