சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்புகள் துண்டிப்பால் தேனியில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தேனி : கம்பம் பள்ளத்தாக்கில் விவசாய மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் முரளிதரனிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றை ஒட்டிய பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையான நிலங்களுக்கு பல கி.மீ., துாரத்திற்கு குழாய் மூலம் கொண்டு சென்று வாழை, திராட்சை,

தேனி : கம்பம் பள்ளத்தாக்கில் விவசாய மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் முரளிதரனிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றை ஒட்டிய பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையான நிலங்களுக்கு பல கி.மீ., துாரத்திற்கு குழாய் மூலம் கொண்டு சென்று வாழை, திராட்சை, காய்கறி சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் திருட்டு என கூறி மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டிக்கின்றனர். இதற்கு காரணம் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். கடந்த வாரம் அமைச்சர் பெரியசாமியிடம், 'மின் மோட்டார் துண்டிப்பை கைவிட கோரி மனு அளித்தனர்.

அதன் பின்னும் பிரச்னை தீரவில்லை. விவசாய மின் இணைப்பை துண்டித்ததால் சாகுபடி செய்த பயிர்கள் நீரின்றி காய்கின்றன. ஆர்ப்பாட்டம்நேற்று தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி, செயலாளர் ஜெயபாண்டி, பொருளாளர் நவீன் தலைமையில் 200 விவசாயிகள் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். டி.எஸ்.பி. முத்துராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளை திருடன் என கூறுவதை கண்டித்து கோஷமிட்டனர்.

அவசியம் ஏன்விவசாயிகள் கலெக்டரை சந்திக்க திரண்டு வந்தனர். போலீசார் 10 பேர் செல்ல அனுமதித்தனர். கலெக்டரிடம் விவசாயிகள் வழங்கிய மனுவில், 'இத்தனை ஆண்டுகளாக எந்த அரசும் எடுக்காத நடவடிக்கையை இப்போது எடுக்க வேண்டிய அவசியம் என்ன. மின் இணைப்பை துண்டித்து பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, குழாய்களை சேதப்படுத்தியதால் பயிர்கள் நீரின்றி காய துவங்கியுள்ளன. மின் இணைப்பு துண்டிப்பை நிறுத்த வேண்டும். துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரினர்.

கலெக்டர், 'தவறான வழியில் நீர் எடுப்பவர்களை விவசாயிகள் தடுக்க வேண்டும். குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்'என்றார்.வஞ்சிக்க வேண்டாம்தலைவர் நாராயணசாமி கூறுகையில், ''வறட்சியால் 1000 அடிக்கு போர் அமைத்தும் நீர் இல்லை. அரசு விதிகளுக்கு உட்பட்டு தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்கிறோம். 22 பேரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம். தவறான செயல்களுக்கு தண்ணீர் எடுக்க வில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X