பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் 'அட்மிஷன்': விண்ணப்பிக்க சேவை மையம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு கல்லுாரி முதல்வர் முனைவர் பத்மினி செய்திக்குறிப்பு:உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., - பொது - பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.தற்போது, 2021 - 22ம் கல்வியாண்டு,

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு கல்லுாரி முதல்வர் முனைவர் பத்மினி செய்திக்குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., - பொது - பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தற்போது, 2021 - 22ம் கல்வியாண்டு, இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in ஆகிய இணையதள முகவரியில் ஆக., 10ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
தவிர, கல்லுாரியில் உள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் இரண்டு ரூபாய் செலுத்தினால் போதும். மேலும், விபரங்களுக்கு கல்லுாரி அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X