பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் முகேஷ் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வருகிறது

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகர்கோவில் : முன்னணி மலையாள நடிகரும், மா.கம்யூ., எம்.எல்.ஏ.வுமான முகேஷின் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வருகிறது. விவாகரத்து கேட்டு மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் முகேஷ், தற்போது கொல்லம் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ.வாக உள்ளார். 1987ல் நடிகை சரிதாவை திருமணம் செய்தார். 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் 2011ல் இருவரும் பிரிந்தனர்.அதன் பிறகு பிரபல நடன கலைஞர்

நாகர்கோவில் : முன்னணி மலையாள நடிகரும், மா.கம்யூ., எம்.எல்.ஏ.வுமான முகேஷின் இரண்டாவது திருமணமும் முடிவுக்கு வருகிறது. விவாகரத்து கேட்டு மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் முகேஷ், தற்போது கொல்லம் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ.வாக உள்ளார். 1987ல் நடிகை சரிதாவை திருமணம் செய்தார். 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் 2011ல் இருவரும் பிரிந்தனர்.அதன் பிறகு பிரபல நடன கலைஞர் மேதில் தேவிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரை முகேஷ் 2013ல் திருமணம் செய்து கொண்டார். மேதில் தேவிகாவுக்கும் இது இரண்டாவது திருமணமாக அமைந்தது.இந்நிலையில் மேதில் தேவிகா விவாகரத்து கோரி கொல்லம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ''முகேஷின் கருத்துகளுடன் ஒத்து போக முடியாததால் விவகாரத்து கோரியுள்ளேன். விவாகரத்து கிடைத்தாலும் இரண்டு பேரும் நண்பர்களாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202123:46:20 IST Report Abuse
Bhaskaran ஏவிஎம் ராஜன் வாலி வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற ஒரு சிலர் நடிகைகளை திருமணம் செய்து வாழ்வில் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X