பொது செய்தி

இந்தியா

'ஓபி' அடிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீதுகண்காணிப்பு!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சிறப்பாக பணியாற்றாமல் 'ஓபி' அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கியுள்ளது. அதிக விடுமுறை எடுப்பவர்கள், லஞ்சம், ஊழல் புகார்களில் சிக்கியவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முன் கூட்டியே ஓய்வளித்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்
'ஓபி' அடிக்கும் மத்திய அரசு, அதிகாரிகள் கண்காணிப்பு

சிறப்பாக பணியாற்றாமல் 'ஓபி' அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கியுள்ளது. அதிக விடுமுறை எடுப்பவர்கள், லஞ்சம், ஊழல் புகார்களில் சிக்கியவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முன் கூட்டியே ஓய்வளித்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 'மத்திய அரசு பணிகளில் சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.


50 வயதுக்கு மேற்பட்டோர்ஆண்டுதோறும் அதிகாரிகளின் பணிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றாத உயர் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றாத உயர் அதிகாரிகள் பற்றிய ஆய்வை மத்திய பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் கடந்த வாரம் துவக்கியுள்ளது.
இது பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மத்திய செயலக பணிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக விடுமுறை எடுப்பவர்கள், லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வராதது, பணி நேரத்தில் சொந்த வேலைகளை பார்ப்பது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளும் ஆய்வு செய்யப்படும்.ஆய்வின் முடிவில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு முன் கூட்டியே ஓய்வு அளிக்கப்படும். எனினும் அடுத்த ஓராண்டுக்குள் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.


தனித்தனியாக ஆய்வுஆய்வின்போது, அதிகாரிகள் பணியில் சேர்ந்த காலத்தில் இருந்து, தற்போது வரையிலான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அதிகாரிகள் பற்றி சம்பந்தப்பட்ட துறையும், அமைச்சகமும் தனித்தனியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது தெரிந்தால் சம்பந்தப்பட்ட துறை அல்லது அமைச்சக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆய்வறிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், பதவி, மொபைல் எண், இ - மெயில் முகவரி உட்பட அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


பாரபட்சம் இல்லைநிர்வாகத்தை சீர்படுத்தவும், ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்கவுமே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மக்களுக்கு சேவை செய்வது தான் அரசு அதிகாரிகளின் பணி. இதில் முறைகேடுகளுக்கு இடம் அளிக்க கூடாது. இதை பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவதில் அர்த்தம் இல்லை. இதில் எந்த அரசியலுக்கும் இடமில்லை. இந்த விவகாரத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-ஜூலை-202120:26:16 IST Report Abuse
sankaranarayanan ஓ பி என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் = What Is Organizational Behavior? Organizational behavior is the academic study of how people interact within groups. The principles of the study of organizational behavior are applied primarily in attempts to make businesses operate more effectively.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜூலை-202119:18:22 IST Report Abuse
sankaseshan ஓரம் கட்டுங்க இதை மோடி அரசால் மட்டும் செய்ய முடியும்
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
28-ஜூலை-202117:14:47 IST Report Abuse
PKN ஹாஹாஹா இதைதான் 7 வருடமாக சொல்கிறார்கள் ஒரு வேளை தேர்தல் நிதி வசூலிக்கும் தந்திரமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X