சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மீது பஸ் மோதல் 2 வாலிபர்கள் பலி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.சேலம், வெங்கட்ராவ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக், 27; எம்.சி.ஏ., முடித்துள்ளார். தற்போது சென்னையில் தங்கி மியூசிக் டைரக்டர் படிப்பை படித்து வந்தார். இவர், நேற்று காலை சேலத்திற்கு, 'டாடா செஸ்ட்' காரில் புறப்பட்டார்.காரை சென்னை, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன், 28 ஓட்டினார்.

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.சேலம், வெங்கட்ராவ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக், 27; எம்.சி.ஏ., முடித்துள்ளார்.

தற்போது சென்னையில் தங்கி மியூசிக் டைரக்டர் படிப்பை படித்து வந்தார். இவர், நேற்று காலை சேலத்திற்கு, 'டாடா செஸ்ட்' காரில் புறப்பட்டார்.காரை சென்னை, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன், 28 ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் புறவழிச்சாலையில் மதியம் 12:20 மணியளவில் வந்தபோது, எதிரே சென்னை சென்ற அரசு பஸ், கார் மீது மோதியது. இதில் ஆஷிக் மற்றும் டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.நால்வர் கைதுகள்ளக்குறிச்சி மாவட்டம், அக்கரைபாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் அருண், 22; அஜீத்குமார், 23. கடந்த 25ம் தேதி இவர்கள், 'டியோ' மொபட்டில் பழநி சென்று திரும்பினர்;

அருண் ஓட்டினார்.மதியம் 2:00 மணிக்கு சேலம் மகுடஞ்சாவடி, காளிகவுண்டம்பாளையம் அருகே வந்தபோது, 'ஹூண்டாய் கிரிட்டா' கார், மற்றொரு காரை வேகமாக முந்தும்போது, மொபட்டில் மோதி, நிற்காமல் சென்றது. இதில், அஜீத்குமார் படுகாயம் அடைந்தார். இது குறித்து, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் அளித்த பேட்டி:மகுடஞ்சாவடியில் விபத்தை ஏற்படுத்தி கார் மாயமான சம்பவம், அதன் பின்னால் வந்த வாகன வீடியோவில் பதிவானதை, அதன் டிரைவர் வழங்கி உதவினார். அதை வைத்து, விபத்தை ஏற்படுத்திய காரின் விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலுார் விரைந்தனர். கார் டிரைவர் சதீஷ்குமார், 35, கூட்டாளிகளான வினோத், 32, கவுதம்ராஜ், 31, அருண்குமார், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், குடியை மறக்க, நான்கு பேரும் சங்ககிரி பூமணி கோவிலுக்கு சென்று, பூஜை செய்து கயிறு கட்டியுள்ளனர். அதன்பின்னும் மது அருந்தி போதையில் அதிவேகம், அஜாக்கிரதையாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, நிற்காமல் சென்றது தெரிந்தது. இவ்வாறு அவர் கூறிார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X