பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அறிவுரை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவிட் தொற்று பரவாமல் இருக்க, பணியிடங்களில் தொற்று கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால், கொரோனா பாதிப்பின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் தொற்று தடுப்பு நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பணியிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற

பெ.நா.பாளையம்:கோவிட் தொற்று பரவாமல் இருக்க, பணியிடங்களில் தொற்று கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால், கொரோனா பாதிப்பின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் தொற்று தடுப்பு நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பணியிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமென, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார துறையினர் கூறியதாவது:காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி, மணம் மற்றும் சுவை இழப்பு போன்ற நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், பணியாளர்கள் நிறுவனங்களுக்கு செல்லக்கூடாது. பணியிடங்களுக்கு வரும் தொழிலாளர்களை, உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். பணியிடங்களில், பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணியாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்கும்படியும், நுழைவாயில் மற்றும் முக்கியமான இடங்களில் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X