பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டில் சிறுவர்கள் குஷி: கொரோனா அச்சம் போயேபோச்சு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மைதானங்களில் காணுமிடமெல்லாம் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்கின்றனர்.கொரோனா பரவலால், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள், இளைஞர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமே, முழு வீச்சில் 'ஆன்லைன்' வகுப்பு நடக்கிறது.மற்ற
 விளையாட்டில் சிறுவர்கள் குஷி: கொரோனா அச்சம் போயேபோச்சு

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மைதானங்களில் காணுமிடமெல்லாம் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்கின்றனர்.கொரோனா பரவலால், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள், இளைஞர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமே, முழு வீச்சில் 'ஆன்லைன்' வகுப்பு நடக்கிறது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பெயரளவுக்கு, சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்புகள் நடக்கிறது. இதனால், சிறுவர்கள் பல மணி நேரங்கள், மொபைல்போனில் மூழ்கி விட்டனர். 'பப்ஜி, கால் ஆப் டூட்டி, ப்ரீ பயர்,' என பல 'வீடியோ கேம்கள்' விளையாடி, பொழுதுபோக்குகின்றனர்.ஆனால், பெரும்பாலானோர் மைதானங்களில் சென்று விளையாடி மகிழ்கின்றனர். ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், சிறுவர்கள், இளைஞர்கள் மைதானங்களில், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து விளையாடி பொழுது போக்குகின்றனர்.
கொட்டும் மழையிலும் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இதனால், மைதானங்களில் காணும் இடமெல்லாம் சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டமாக உள்ளது.கொரோனா மூன்றாவது அலை அதிகம் சிறுவர்களை தாக்கும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறுவர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக விளையாடுவதை, பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X