பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனையாகும் விவசாய நிலங்கள் தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
உடுமலை;விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க, தேவையான நீர் பாசனம் வசதி மற்றும் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 2.22 லட்சம் ஏக்கரில் வேளாண் பயிர் சாகுபடியும், 36 ஆயிரத்து, 602 ஏக்கரில், தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுவதாக, வேளாண்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பி.ஏ.பி.,

உடுமலை;விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க, தேவையான நீர் பாசனம் வசதி மற்றும் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 2.22 லட்சம் ஏக்கரில் வேளாண் பயிர் சாகுபடியும், 36 ஆயிரத்து, 602 ஏக்கரில், தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுவதாக, வேளாண்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பி.ஏ.பி., அமராவதி, கீழ்பவானி பாசன திட்டங்களும், குளத்துப்பாசனம், கிணறு, போர்வெல் உள்ளிட்ட இறவைப்பாசனம் மற்றும் மானாவாரி பாசனமும் உள்ளது.தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, சோளம், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள்; வெங்காயம், தக்காளி, வெண்டை, மிளகாய், காலிபிளவர் என காய்கறி பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆனால், தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள் உருவாக்கம், மழைக்குறைவு, வறட்சி ஆகிய காரணங்களினால், விவசாய நிலங்களின் பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளாக மாறி வருகிறது. தண்ணீர் வசதி இல்லாத பகுதிகளில், தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாக மாற்றப்படுகிறது.'விவசாயத்துக்கு தேவையான நீர் பாசனம் வசதிகள், மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X