பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனத்தில் உரங்கள் பயன்பாடு: தோட்டக்கலைத்துறை அறிவுரை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
உடுமலை:நுண்ணீர் பாசனத்தில், நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தும் போது, விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலைத்துறையின் நுண்ணீர் பாசன முறையானது, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில், நீரில் கரையும்

உடுமலை:நுண்ணீர் பாசனத்தில், நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தும் போது, விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலைத்துறையின் நுண்ணீர் பாசன முறையானது, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில், நீரில் கரையும் உரங்களில், நைட்ரேட் உரங்களை பயன்படுத்தும் போது, அவை நைட்ரேட் ரிக்டேஸ் என்ற என்சைம் உதவியுடன் அம்மோனியாவாக மாற்றப்பட்டு, இனச்செடிகளில் தழைச்சத்து தேவையினை பூர்த்தி செய்கிறது.சல்பேட் உரங்களை கால்சியம் உள்ள உரங்களுடன் சேர்த்து பயன்படுத்தினால், கால்சியம் சல்பேட்( ஜிப்சம்) உருவாகி அடியில் தங்கி விடும். கடினத்தன்மையுள்ள நீரில் சல்பேட் மற்றும் பாஸ்போ உரங்களை பயன்படுத்தினால் உப்புக்கள் படிந்து விடும்.பாசன நீரின் தன்மை அமில, காரத்தன்மை குறைவாக இருந்தால், பாஸ்பாரிக் அமிலத்தை மணிச்சத்தாக மாற்ற வேண்டும். கார, அமிலத்தன்மை அதிகமாக இருந்தால், ஜிப்சம் அல்லது எப்சம் உப்புக்களாக மாறி அடியில் தங்கி விடும்.பொட்டாசியம் சல்பேட் உரங்கள் நீரில் எளிதில் கரையக்கூடியவை. ஆனால், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்கள் உள்ள நீரில் பொட்டாசியம் சல்பேட்டினை பயன்படுத்தினால், கரைதிறன் குறைந்து, உப்புக்களாக படிந்து விடும்.இரண்டு கரைதிறன் கொண்ட உரங்களை நீரில் கரைக்கும் போது, அவை இணைந்து, அடியில் தங்கி விடும். இத்தகைய உரங்களை ஒரே தொட்டியில், ஒன்றாக இணைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும்.இலைவழி உரப்பாசனம் மண்ணின் அமிலத்தன்மை சரி விகிதத்தில் இல்லாத நேரத்தில் செடிகள் சரியாக உறிஞ்ச இயலாது; செடியில் சத்துப்பற்றாக்குறைகள் காணப்படும். இத்தகைய நிலையில் நுண்ணுாட்டசத்துக்களும், முதன்மை உரங்களும் இலைவழி வாயிலாக, தெளிப்பதால் செடிகளின் சத்து தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது.நீர் வழி உரப்பாசனம் தரப்பட வேண்டிய நாளில், முதல் அரைமணி நேரம் சொட்டு நீர் பாசனம் செய்தல் வேண்டும். மண் நன்கு ஈரமான பின்னர், கரைத்து வைக்கப்பட்ட உர நீர்க்கரைசலை உரத்தொட்டியில் ஊற்றி, 15 நிமிடங்கள் கொடுக்க வேண்டும்.அப்போதுதான், உர நீர் ஈர மண்ணில் விழுந்து சீராக பரவும். நீர் உரப்பாசனம், குறுகிய காலப்பயிர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், அதிக வயதுள்ள பயிர்களுக்கு, 5 நாட்களுக்கு ஒரு முறையும் கொடுக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X