அரசியல் செய்தி

தமிழ்நாடு

'9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை'

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 5,000 சதுரடி பரப்பில் 48 வகையான 1,000 மரக்கன்றுகளுடன், 'உயிர்க்கோள்' அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று,
'9ம் வகுப்பு ,பிளஸ் 2  பள்ளிகள், திறக்க ஆலோசனை'

சென்னை : ''தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 5,000 சதுரடி பரப்பில் 48 வகையான 1,000 மரக்கன்றுகளுடன், 'உயிர்க்கோள்' அடர்வனம் அமைக்கப்
பட்டுள்ளது.

இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆயிரமாவது மரக்கன்றை நட்டார். அதைத் தொடர்ந்து, 'கல்வி - 40' என்ற செயலியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்; புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையையும் திறந்து வைத்தார்.பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். அரசு பள்ளி களின் தரம் மேம்படுத்தப் படும். அரசு பள்ளி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், பாரபட்சமின்றி அகற்றப்படும்.

கொரோனா மூன்றாவது அலை என்ற அச்சத்தை கடந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அரசின் சுகாதார வழிகாட்டுதல்படி, பள்ளிக்கு அனுப்ப முன் வர
வேண்டும். பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள குழப்பத்தை நீக்க, தேவையான மாற்றங்களை செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது.கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்த பின், தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்துார் பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஜூலை-202121:14:44 IST Report Abuse
தத்வமசி படிக்காமலே ஆல் பாஸ் திட்டம் என்று தொடங்கி விடுங்கள். அதற்க்கு ஒருவரை கமிஷனராக நியமனம் செய்து விடுங்கள். அதை சாதனையாக கூறிக் கொல்லலாம். அனைவரும் உங்களுக்கே ஓட்டு போட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜூலை-202116:36:09 IST Report Abuse
M  Ramachandran தகுதி தேர்வில் குழப்பம் உங்களுக்க அல்லது தேர்வானைக்க? இன்னும் வசதி பெருக்க தீர்மானிக்க முடிய வில்லையா?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். பள்ளி திறப்பு எல்லாம் எங்கள் விருப்பத்திற்குரிய மழலையர் குல திலகம் இன்பாண்ணாவை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X