பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் நலன் கூட்டம்: 'ஆன்லைனில்' நடத்த எதிர்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ல் 'ஆன்லைனில்' நடத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், 'கூகுள் மீட்' காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. மாவட்ட

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ல் 'ஆன்லைனில்' நடத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், 'கூகுள் மீட்' காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது மனுக்களை, வேளாண் அலுவலகத்தில் வழங்கலாம். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
இணையவழியில் விவசாயிகள் கூட்டம் நடத்தினால், பிரச்னைகளை முறையாக தெரிவிக்க முடியாது. கொரோனா பரவல் தீவிரம் மிகவும் குறைந்துவிட்டது. நேரடியாக இக்கூட்டம் நடத்த வேண்டும். அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் மட்டும், கூட்ட நெரிசலோடு நடைபெறுகிறது. விவசாயிகள் கூட்டத்தை இணையவழியில் நடத்தினால் நீர்த்து போகும். முறையான பாதுகாப்போடு கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X