உடைந்த தடுப்பணை: சீரமைக்காததால் விவசாயிகள் அதிருப்தி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், மாப்பிள்ளைகவுண்டன்புதுார் பகுதி, விளை நிலங்கள் பாசனம் பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சூலக்கல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது.தடுப்பணையானது, கூடுதல் நீர் தேங்கும் வகையில், 30 மீ., நீளம் மற்றும் 1.5 மீ., உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டது. தடுப்பணையில் நீர் தேங்கியதால், சுற்றியுள்ள

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், மாப்பிள்ளைகவுண்டன்புதுார் பகுதி, விளை நிலங்கள் பாசனம் பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சூலக்கல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது.தடுப்பணையானது, கூடுதல் நீர் தேங்கும் வகையில், 30 மீ., நீளம் மற்றும் 1.5 மீ., உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டது. தடுப்பணையில் நீர் தேங்கியதால், சுற்றியுள்ள பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், கூடுதல் பரப்பளவில் தென்னை மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டன.மேலும், மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார், எஸ்.குமாரபாளையம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், இப்பகுதியில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த தடுப்பணையில் திடீர் விரிசல் ஏற்பட்டு, தென்பகுதி தடுப்பணை உடைந்தது. இதனால், தடுப்பணையில் தேங்கியிருந்த ஒட்டு மொத்த நீரும் வெளியேறி, வறட்சிக்குள்ளானது.உடனடியாக, ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வடக்கு ஒன்றிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். இதுவரை, தடுப்பணை சீரமைக்கப்படவில்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை பெய்தும், சூலக்கல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும், உடைப்பு காரணமாக, இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கவில்லை.இதனால், தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தி, குரல் கொடுத்த சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மழை நீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தடுப்பணை உடைப்பை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X