ரோடு சந்திப்பில் பெரிய பள்ளம் விபத்து: அச்சத்தில் மக்கள்| Dinamalar

ரோடு சந்திப்பில் பெரிய பள்ளம் விபத்து: அச்சத்தில் மக்கள்

Added : ஜூலை 27, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இணைப்பு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள பள்ளத்தால், விபத்து அச்சம் நிலவுகிறது.பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தெப்பக்குளம் ரோடு - கோட்டூர் ரோட்டை இணைக்கும் வகையில், இணைப்புச்சாலை உள்ளது.இவ்வழியாக, ஆழியாறு, கோட்டூர், அர்த்தநாரிபாளையம், சமத்துார், வால்பாறை
 ரோடு சந்திப்பில் பெரிய பள்ளம் விபத்து: அச்சத்தில் மக்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இணைப்பு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள பள்ளத்தால், விபத்து அச்சம் நிலவுகிறது.பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தெப்பக்குளம் ரோடு - கோட்டூர் ரோட்டை இணைக்கும் வகையில், இணைப்புச்சாலை உள்ளது.இவ்வழியாக, ஆழியாறு, கோட்டூர், அர்த்தநாரிபாளையம், சமத்துார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், வாகனங்கள் சென்று வருகின்றன.இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி அருகே இணைப்பு ரோட்டின் சந்திப்பு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.வாகனங்கள் வேகமாக வந்து, கவனமின்றி திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X