8,000 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்: அமைச்சர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8,000 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்: அமைச்சர் அறிவிப்பு

Added : ஜூலை 27, 2021
Share
செங்கல்பட்டு: ''தமிழகத்தில் வாடகை கட்டடங்களில் செயல்படும், 8,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் விரைவில் கட்டப்படும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், அத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், செங்கல்பட்டில் நடந்தது. ஊரக தொழில் துறை

செங்கல்பட்டு: ''தமிழகத்தில் வாடகை கட்டடங்களில் செயல்படும், 8,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் விரைவில் கட்டப்படும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், அத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், செங்கல்பட்டில் நடந்தது.
ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை இரண்டாக பிரிப்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் சக்கரபாணி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 8,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் வாடகையாக 18 கோடி ரூபாய் செலுத்துகிறோம். இந்த கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில், சி.எஸ்.ஆர்., நிதியை பெற்று, ரேஷன் கடைகள் கட்டிக்கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 ஆயிரம் டன்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், கரும்பு பயிருக்கு பதிவு செய்வதுபோல், நெல் பயிரிடவும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில், 1,000 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகள் இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X