எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கனவுகள் நனவாகுமா: பாதியில் நிற்கும் சுற்றுலா திட்டங்கள்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில், சுற்றுலா வளர்ச்சித்திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா வருவோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.வால்பாறையில், கோவில்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாக்காடுகள் உள்ளன. தேசியபூங்காவான அக்காமலை கிராஸ்ஹில்ஸ், தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார்,
 கனவுகள் நனவாகுமா: பாதியில் நிற்கும் சுற்றுலா திட்டங்கள்

வால்பாறை: வால்பாறையில், சுற்றுலா வளர்ச்சித்திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா வருவோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

வால்பாறையில், கோவில்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாக்காடுகள் உள்ளன. தேசியபூங்காவான அக்காமலை கிராஸ்ஹில்ஸ், தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார், திரும்பிய பக்கமெல்லாம் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளன.இதனால், வால்பாறையானது, சுற்றுலாபயணிகளின் மனதை கொள்ளை கொண்ட பகுதியாக விளங்குகிறது.

வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க, தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் கோடைவிழாவும் நடத்தப்படுகிறது. ஆனால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால், பல்வேறு பகுதியில் இருந்து வால்பாறைக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இதனையடுத்து, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்கள் சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
அவசர கதிஅதன் விளைவாக, வால்பாறை நகராட்சி சார்பில் நகரப்பகுதியில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லமும், 5.6 கோடி ரூபாய் மதிப்பில் தாவரவியல் பூங்காவும் அமைக்கும் பணி நடக்கிறது.பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், சட்டசபை தேர்தலுக்கு முன், கடந்தமார்ச் மாதம் படகுஇல்லம், தாவரவியல் பூங்கா ஆகியவை அவசரகதியில் திறக்கப்பட்டது. ஆனால், பணி முழுமையாக நிறைவடையாத நிலையில் திறக்கப்பட்டதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் பயன்படுத்த முடியவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது: நீண்ட கால போராட்டத்துக்கு பின், வால்பாறையில் படகுஇல்லம், தாவரவியல்பூங்கா அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலா வளர்ச்சி பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், எஸ்டேட் பகுதியில் ரோடு அமைக்கும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு, தெரிவித்தனர்.ஊழலால் சிக்கல்நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சுற்றுலா திட்டங்கள், வளர்ச்சி பணிகளில் முன்னாள் கமிஷனர் மீது ஊழல் குற்றசாட்டு எழுந்துள்ளது. அதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவுக்கு வந்த பின், கிடப்பில் உள்ள அனைத்து வளர்ச்சிப் பணிகளும் துவங்கப்படும்,' என்றனர்.
வேலைவாய்ப்பு பெருகும்!பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:வனவிலங்கு -- மனித மோதல், குறைவான சம்பளம், மாற்றுத்தொழில் இல்லாதது போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, சுற்றுலா மையமாக அறிவித்து, அடிப்படை வசதிகள், சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். பாதியில் நிற்கும் படகுசவாரி, தாவரவியல் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சுற்றுலா திட்டத்தில், ரோப்கார் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதனால், மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X