அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாலை பராமரிப்பில் ரூ.4216 கோடி வீணடிப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை : எட்டு மாவட்டங்களில் சாலை புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4216 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை பராமரிக்க ஒப்பந்தம் ஏற்படுத்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தின்படி சாலையை சீரமைத்து ஐந்து

சென்னை : எட்டு மாவட்டங்களில் சாலை புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4216 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை பராமரிக்க ஒப்பந்தம் ஏற்படுத்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தின்படி சாலையை சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு முறையாக பராமரிக்க வேண்டும். பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள 377 கி.மீ. சாலைகள் 2014ல் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.இதில் 191 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், 18௬ கி.மீ. மாவட்ட சாலைகள். ஒப்பந்தம் 2019ல் முடிந்தது. அந்நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு 234 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அதன்பின் கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

இங்கு 307 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், 274 கி.மீ. மாவட்ட சாலைகள் பராமரிப்பு பணிக்கு 450 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.ராமநாதபுரம் கோட்டத்தில் 229 கி.மீ. மாநில நெடுஞ்சாலை, 340 கி.மீ. மாவட்ட சாலை பராமரிப்பதற்கு 460 கோடி ரூபாய், திருவள்ளூர் கோட்டத்தில் 498 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் 278 கி.மீ. மாவட்ட சாலைகள் பராமரிப்புக்கு 630 கோடி ரூபாய்,விருதுநகர் கோட்டத்தில் 611 கோடி ரூபாய், பழநி - சிவகங்கை கோட்டங்களில் 1065 கி.மீ. பராமரிப்பு பணிக்கு 1403 கோடி ரூபாய் உட்பட மேலும் பல கோட்டங்களில் சேர்த்து 4216 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இதன் வாயிலாக மொத்தமாக 4208 கி.மீ. சாலைகள் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.இந்த ஒப்பந்தங்களை அருப்புகோட்டை, மதுரை, கோவையை சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன.நெடுஞ்சாலை துறையால் ஒரு கி.மீ. மாநில நெடுஞ்சாலை அமைப்பதற்கு ௧ கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு சாலை அமைத்தால் அதை மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் புதுப்பிக்க வேண்டும். முறையாக சாலை அமைத்து விட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் தாங்கும். எனவே ஒதுக்கிய நிதியில் 50 சதவீதம் கூட செலவாக வாய்ப்பில்லை.இந்த முறைகேட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அதிகாரிகள் என அனைவரும் கமிஷன் பெற்றுள்ளனர்.எனவே ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நடந்துள்ளன என ஆய்வு செய்து முறையாக பணிகளை செய்யாத ஒப்பந்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.எந்த வளர்ச்சியும் இல்லைதமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:வெளிநாடுகளை போல நம் மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த திட்டத்தை தங்கள் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பயன்படுத்தி உள்ளனர்.எட்டு மாவட்டங்களில் சாலைகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. தற்போது துாத்துக்குடி கோட்டத்திற்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த இருப்பதாக தகவல் வருகிறது. மக்கள் பணத்தை முறையாக செலவிட்டு சாலைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X