பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோடு: விரிவுபடுத்த வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோட்டை விரிவுபடுத்தி, நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், முக்கிய சுற்றுலா தலங்கள் பொள்ளாச்சி, ஆழியாறு மற்றும் உடுமலை திருமூர்த்திமலை அமைந்துள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆழியாறு

உடுமலை:உடுமலை அருகே, சுற்றுலா தலங்களை இணைக்கும் ரோட்டை விரிவுபடுத்தி, நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், முக்கிய சுற்றுலா தலங்கள் பொள்ளாச்சி, ஆழியாறு மற்றும் உடுமலை திருமூர்த்திமலை அமைந்துள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருமூர்த்திமலை வர, பொள்ளாச்சி, உடுமலை நகரங்களை தவிர்த்து சுங்கம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி, ஜிலோபநாயக்கன்பாளையம், தளி வழியாக செல்லும் வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழநிக்கு செல்ல இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில், எரிசனம்பட்டி முதல் தளி வரையுள்ள 9 கி.மீ., ரோடு நெடுஞ்சாலைத்துறை, உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோடு பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல், உள்ளது.விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரையை சந்தைப்படுத்த இந்த ரோட்டில் சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.சரக்கு வாகனங்கள் செல்லும் போது, பல கி.மீ., துாரத்திற்கு பிற வாகனங்கள் சரக்கு வாகனங்களின் பின்னால், அணிவகுப்பாக செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. சுற்றுலா போக்குவரத்து அதிகரித்துள்ள ரோட்டை, விரிவுபடுத்தி, நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X