பொது செய்தி

தமிழ்நாடு

கலாம் நினைவு தினம்: சென்னையில் அனுசரிப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம், சென்னையின் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.வேளச்சேரி, டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள், ஏழைகள் மற்றும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவ - மாணவியரை கல்விக்காக தத்தெடுத்தனர். அவர்களின், பிளஸ் 2 வரையிலான படிப்புச் செலவை ஏற்றுள்ளனர்.* கண்ணகி நகர், அப்துல் கலாம்

சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம், சென்னையின் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
வேளச்சேரி, டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள், ஏழைகள் மற்றும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவ - மாணவியரை கல்விக்காக தத்தெடுத்தனர். அவர்களின், பிளஸ் 2 வரையிலான படிப்புச் செலவை ஏற்றுள்ளனர்.
* கண்ணகி நகர், அப்துல் கலாம் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த, 300 ஏழை குடும்பங்களுக்கு, தலா 1,000 ரூபாய் மதிப்பிலான 16 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
* குரோம்பேட்டை, ரங்க ராமானுஜ சேவா அறக்கட்டளை, திருநீர்மலை அரிமா சங்கம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில், அய்யாசாமி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, 26 மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஸ்மார்ட் போன்'களை வழங்கினர்.
* அப்துல் கலாமை நினைவுக்கூறும் வகையில், 'சமாரியர்' அமைப்பு மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் நிறைவு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை, பட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
* 1 கோடி விதை சேகரிப்பு முகாம், 'கிரேட் இண்டியா முவ்மென்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்' சார்பில் நடந்தது. பசுமை, துாய்மை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
* அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, 1 கோடி விதைகள் சேகரிக்கும் உலக சாதனை முகாம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் விஜயராணி துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X