பொது செய்தி

தமிழ்நாடு

கம்பளி விற்பனை ஜோர் குளிரான சீதோஷ்ணம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில் நிலவும், குளிரான சீதோஷ்ண நிலையை மையமாகக் கொண்டு, வடமாநில வியாபாரிகள் கம்பளி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், சில தினங்களாக, மழையின் தாக்கம் காரணமாக, இரவில், குளிரான சீதோஷ்ண நிலை ஏற்படுகிறது. இதனால், ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால ஆடை விற்பனை அதிகரித்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள், பல இடங்களில் முகாமிட்டு, கம்பளி மற்றும்
 கம்பளி விற்பனை ஜோர் குளிரான சீதோஷ்ணம்

உடுமலை:உடுமலையில் நிலவும், குளிரான சீதோஷ்ண நிலையை மையமாகக் கொண்டு, வடமாநில வியாபாரிகள் கம்பளி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், சில தினங்களாக, மழையின் தாக்கம் காரணமாக, இரவில், குளிரான சீதோஷ்ண நிலை ஏற்படுகிறது.
இதனால், ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால ஆடை விற்பனை அதிகரித்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள், பல இடங்களில் முகாமிட்டு, கம்பளி மற்றும் உல்லன் ஆடை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சிலர், தலைச்சுமையாகவும், சைக்கிள்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குச்சென்று விற்கின்றனர்.
இதனை மக்கள், ஆர்வமுடன் வாங்குகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, 'குளிர்கால சீசனான நவ., டிச., மற்றும் ஜன., மாதங்களில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்'.'இதனால், மழைப்பொழிவு காணப்படும் இடங்களைத் தேர்ந்தெடுத்து கம்பளிகள் விற்பனை செய்யப்படுகிறது. கம்பளி, சோலாபுரி போர்வை, மெத்தை கவர்கள், விரிப்புகள் ஒவ்வொன்றும், 250 முதல், 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X