வாகன எரிவாயு நிலையங்கள்: முதல்வர் திறப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாகன எரிவாயு நிலையங்கள்: முதல்வர் திறப்பு

Added : ஜூலை 27, 2021
Share
+ சென்னை:திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் அருகே உள்ள வல்லுாரில், 'டோரன்ட் காஸ்' நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள, 'சிட்டி கேட்' நிலையம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, 25 வாகன எரிவாயு விற்பனை நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், எரிவாயு வினியோக திட்டத்திற்காக டோரன்ட் காஸ் நிறுவனம் 5,000 கோடி

+ சென்னை:திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் அருகே உள்ள வல்லுாரில், 'டோரன்ட் காஸ்' நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள, 'சிட்டி கேட்' நிலையம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, 25 வாகன எரிவாயு விற்பனை நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், எரிவாயு வினியோக திட்டத்திற்காக டோரன்ட் காஸ் நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால், 5,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் அருகே உள்ள வல்லுாரில் சிட்டி கேட் ஸ்டேஷன் 1.4 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், 33 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு, குழாய் வழியாக சமையல் எரிவாயு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 25 சி.என்.ஜி., நிலையங்கள் எனப்படும், இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள், வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளன.வல்லுாரில் உள்ள சிட்டி கேட் நிலையத்தில் இருந்து, இந்த நிலையங்களுக்கு எரிவாயு எடுத்து வரப்பட்டு, வாகனங்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக, இது அமையும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சி.என்.ஜி., வாகனங்களுக்கு இது உதவியாக இருக்கும்.இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம், டோரன்ட் காஸ் நிறுவன இயக்குனர் ஜீனல் மேத்தா, செயல் இயக்குனர் பிரகாஷ் சஜ்னானி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X