அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித் ஷாவிடம் அரசியல் பேசவில்லை: அ.தி.மு.க., - பழனிசாமி., விளக்கம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
''பிரதமர் நரேந்திரமோடியிடம் என்ன கோரிக்கைகளை முன்வைத்தோமோ, அதைத் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் வலியுறுத்தினோம். அவரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை,'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனி்சாமி., டில்லியில்தெரிவித்தார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்தார். இதற்கு நன்றி

''பிரதமர் நரேந்திரமோடியிடம் என்ன கோரிக்கைகளை முன்வைத்தோமோ, அதைத் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் வலியுறுத்தினோம். அவரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை,'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனி்சாமி., டில்லியில்தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்தார். இதற்கு நன்றி கூறுவதற்காக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்பன்னீ்ர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், டில்லி வந்திருந்தனர்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த இருவரும், தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். தமிழக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும், பிரதமரிடம் வலியுறுத்தினர். அந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியதாக கூறப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர்.

எப்படியும் சந்தித்து விட்டு கிளம்பி விடலாம் என்ற நம்பிக்கையில், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை என இரு வேளைகளுக்கு, சென்னைக்கு விமான டிக்கெட்டுகளை பதிவு செய்து காத்திருந்தனர்.அமித் ஷாவின் தீவிர பணிகளுக்கு மத்தியில், சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படாமல் தாமதமானது.

இதையடுத்து, விமான டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டு, பன்னீர்செல்வம், பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்திலேயே காத்திருந்தனர்.ஒருவழியாக நேரம் ஒதுக்கப்பட்டது. காலை, 11:30க்கு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இருவரும் சந்தித்துப் பேசினர்; 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.பின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியுடனும் சந்திப்பு நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், வேலுமணி, தளவாய் சுந்தரம், எம்.பி.,க்கள் தம்பிதுரை, ரவீந்திரநாத் உடனிருந்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லம் திரும்பியதும் நிருபர்களிடம் பழனிசாமி., கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அரசியல் ரீதியாக எந்த விஷயங்களையும் பேச வில்லை. பிரதமர் மோடியிடம் பேசிய விபரங்கள் குறித்து, அமித் ஷாவிடமும் விரிவாக விளக்கினோம். மற்றபடி, இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை தேர்தலின் போது கூட்டணி பேச்சு, தொகுதிகள் எண்ணிக்கையை முடிவு செய்வது என, அனைத்து விஷயங்களிலும், பா.ஜ., தரப்பிலிருந்து மிக முக்கிய பங்காற்றியவர் அமித் ஷா. சென்னைக்கு வந்து ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., உடன் பேச்சு நடத்தியவரும் இவர் தான். எனவே, தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடக்கும் சம்பவங்கள் குறித்து, அமித் ஷாவிடம் இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X