சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தாம்பரம்: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில், மருந்தகங்கள், பால் கடைகளில் அடுத்தடுத்து நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த இரும்புலியூர், விவேகானந்தர் தெருவில் உள்ள, தண்டபாணி, 39, என்பவரின் மருந்தகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அதில் இருந்த, 8,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. சண்முக சுந்தரம்,

தாம்பரம்: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில், மருந்தகங்கள், பால் கடைகளில் அடுத்தடுத்து நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த இரும்புலியூர், விவேகானந்தர் தெருவில் உள்ள, தண்டபாணி, 39, என்பவரின் மருந்தகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அதில் இருந்த, 8,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. சண்முக சுந்தரம், 60, என்பவரின் பால் கடை; கணேஷ், 35, என்பவரின் மருந்தகத்தின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன.
இதே போல், சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, பழைய ஜி.எஸ்.டி., சாலையில், விஜயா, 48, என்பவரின், மருந்தகத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடந்திருந்தது. பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, பழைய ஜி.எஸ்.டி., சாலை, திலகவதி நகரில், ஜெகதீசன், 34, என்பவரின் பால் விற்பனை கடையில், 2,500 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
இம்மாதம், 19ம் தேதியும், இதே பகுதியில், அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டும், நான்கு கடைகளில் திருட்டு முயற்சியும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால், அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X