அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலிலும் உள்ளடி நடக்குமோ? :துரைமுருகன் கொந்தளிப்பதன் பின்னணி!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகத்தில் ஏற்கனவே விடுபட்டு போன, ஒன்பது மாவட்டங்களில், செப்., 15க்குள் தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெரும் வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்களுக்கு பொறுப்பை ஒப்படைத்து உள்ளார். அந்த வகையில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்
உள்ளாட்சி தேர்தல், உள்ளடி நடக்குமோ? :துரைமுருகன் கொந்தளிப்பு, பின்னணி!

தமிழகத்தில் ஏற்கனவே விடுபட்டு போன, ஒன்பது மாவட்டங்களில், செப்., 15க்குள் தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெரும் வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்களுக்கு பொறுப்பை ஒப்படைத்து உள்ளார். அந்த வகையில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில், அமைச்சர்கள் துரைமுருகனும், காந்தியும் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில், தான் அமைச்சர் பொறுப்புக்கு வந்த நாளில் இருந்தே, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாட்டை, அமைச்சர் காந்தி செய்து வருவதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், வேலுார் மாவட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் வயது முதிர்வு காரணமாக, கட்சியினரையும், மக்களையும் சந்தித்து சேவையாற்ற முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு, துரைமுருகனுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அவர் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வென்ற, காட்பாடி தொகுதியில் அதிருப்தியில் இருக்கும் சொந்த கட்சியினரை, எப்படி சரி செய்வது என்று புரியாமல் தடுமாறி வருகிறார்.



சலசலப்பு



கட்சியின் பொதுச்செயலராக இருப்பதால், காட்பாடி கிழக்கு, மேற்கு மற்றும் வாலாஜா மேற்கு ஆகிய, ஒன்றியங்களில் இருக்கும் கட்சி செயலர்களை, மேலிட ஒப்புதலோடு, சமீபத்தில் மாற்றி விட்டார். இதனாலும், அதிருப்தி அதிகரித்துள்ளதாக, கட்சியினர் புலம்புகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் சொந்த கட்சியினரே, தன்னை கவிழ்த்து விடுவரோ என்று, துரைமுருகன் அஞ்சுகிறார். அதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். காட்பாடி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், பொன்னையில் நடந்தது.

அதில் தான், காட்பாடியில் தி.மு.க.,வினரே தன்னை தோற்கடிக்க பார்த்த வேலைகளை குறிப்பிட்டு, துரைமுருகன் வெளிப்படையாக பேசி உள்ளார்.பலருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் பேசியது, ஒட்டுமொத்த வேலுார் மாவட்ட தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, வேலுார் மாவட்ட தி.மு.க.,வினர் கூறியதாவது: மாவட்டத்திலிருந்து கட்சியினர், எந்த வேலைக்காக சென்றாலும், துரைமுருகன் அதை செய்து கொடுப்பதில்லை. வன்னியர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், கட்சியிலும் வன்னியர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். மாற்று கட்சி வன்னியர்களோடும் தொடர்பில் இருக்கிறார்.




மிரட்டல் ஒலி



சொந்த கட்சியினரை மதிப்பது இல்லை. கட்சி தலைமைக்கு, இது தொடர்பாக புகார்கள் சென்றுள்ளன. சீனியர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் போட்டியிட, கட்சியினர் பலர் விரும்பினர். ஆனால், மகன் கதிர் ஆனந்துக்கு, 'சீட்' வாங்கினார். எனவே, கதிர் ஆனந்தை தோற்கடிக்க, கட்சியினர் முழு அளவில் பாடுபட்டனர்.

தபால் ஓட்டில் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். அந்த தேர்தல் நெருக்கத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம், வருமான வரித்துறையினரிடம் சிக்கியது. இதற்கு கட்சிக்குள் இருக்கும் துரைமுருகன் விரோதிகள் தான் காரணம். ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான காந்தி, அனைவரையும் மதித்து நடத்துகிறார். இதனால், கட்சியினர் பலரும், காந்தி ஆதரவாளராக மாறிவிட்டனர். காட்பாடி சட்டசபை தொகுதியில், மீண்டும் போட்டியிட்ட துரைமுருகனை தோற்கடிக்க, கட்சியினர் முழு வேகத்தில் ஈடுபட்டனர். சொற்ப ஓட்டில் தான், அவர் வெற்றி பெற்றார்.

இந்நிலைக்கு காரணம், தான் தான் என்பதை, துரைமுருகன் உணரவில்லை. தேர்தலில் எதிர்த்து வேலை செய்தவர்கள் பட்டியலை தயார் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால், அமைச்சர் பதவி பறி போய் விடும். அதனால் தான் துரைமுருகன் கொந்தளிக்கிறார். கட்சி தோற்றால், காரணம் சொல்ல வேண்டும். எனவே, அதற்கான வேலையை, இப்போதே துவங்கி விட்டார். அதன் முதல் அத்தியாயம் தான், பொன்னையில் அவர் கூட்டிய கட்சி நிர்வாகிகள் கூட்டமும், மிரட்டல் ஒலிகளும். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் --


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-ஜூலை-202109:01:02 IST Report Abuse
duruvasar அதுதான் 10.5% உள் ஒதீகீடு கொடுத்தாச்சில்ல. இதைவிட சாதிய ஒழிக்க என்ன செய்யமுடியும். ஜார்ஜ் பொன்னையா வாக்குமூலப்படி ஜாதி அரசியலை ஒழித்தாகிவிட்டது. வண்ணியருக்கு உள் ஒதீக்கீடு மூலம் சாதி அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்தாகி விட்டது. இதைவிட சமூகநீதியை வேறு எவரும் இவ்வளவு சிறப்பாக செய்யமுடியாது.
Rate this:
Cancel
28-ஜூலை-202103:14:43 IST Report Abuse
ராஜா தற்போது திமுக அரசு விதிக்கும் மின் கட்டனக்கொள்ளையின் விளைவு ஊராட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.
Rate this:
Cancel
28-ஜூலை-202101:38:24 IST Report Abuse
அப்புசாமி கவலையே வாணாம் தலிவரே.. பா.ஜ.வின் 100:10:1 பார்முலா உங்களுக்கு பெரு வெற்றியைக் குடுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X