பொது செய்தி

தமிழ்நாடு

'ஈஸ்டர்ன் பை- - பாஸ்' திட்டம்: கால்வாய் பணியில் திடீர் குழப்பம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தாம்பரம்: 'ஈஸ்டர்ன் பை- - பாஸ்' சாலை பணிகளுக்காக நடைபெறும், சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை வரும் வாகனங்கள், தாம்பரம் வழியாக நகருக்குள் நுழைவதால், பல்வேறு முக்கியசாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் - புழல் இணைக்கும் வகையில், பை - பாஸ்

தாம்பரம்: 'ஈஸ்டர்ன் பை- - பாஸ்' சாலை பணிகளுக்காக நடைபெறும், சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை வரும் வாகனங்கள், தாம்பரம் வழியாக நகருக்குள் நுழைவதால், பல்வேறு முக்கியசாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் - புழல் இணைக்கும் வகையில், பை - பாஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டதால் நெரிசல் குறைந்தது.
அடுத்த கட்டமாக, தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரில் இருந்து, ஜி.எஸ்.டி.,மற்றும் வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், 'ஈஸ்டர்ன்' பை - பாஸ் சாலை திட்டத்திற்கு, புத்துயிர் அளிக்க முடிவு செய்யப்பட்டது. நெடுங்குன்றம் - மப்பேடு வரை, இத்திட்டத்திற்கான சாலை விரிவாக்கப் பணிகளும், மழை நீர் கால்வாய் கட்டும், பணிகளும் நடக்கின்றன.
இப்பகுதியில், கால்வாய் உயர்த்திக் கட்டப்படுவதால், குடியிருப்புகள், கடைகளில், மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சந்தானபுரம் பகுதிவாசிகள் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக, கிண்டி, கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில், சதானந்தபுரம் மக்கள் அளித்துள்ள மனு:
பெருங்களத்துாரில் இருந்து, ஆலப்பாக்கம் வழியாக மப்பேடு வரை, சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடக்கின்றன. தற்போதுள்ள நிலையில் இருந்து 5 அடி உயர்த்தி, கால்வாய் கட்டப்படுவதால், சதானந்தபுரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், வீடுகள் மற்றும் கடைகள் பள்ளத்தில் செல்லும். இதனால், மழை, வெள்ளம் வீடுகளுக்குள் புகுவதுடன், கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல் எழும். இதை தடுக்கும் வகையில், கால்வாய் கட்ட, அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X