பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு பிடியில் கூவம் ஆறு: அதிகாரிகள் நடவடிக்கை எப்போது?

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
மணவாள நகர்: திருவள்ளூர், மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அதில் கழிவு நீர் கலக்கப்படுவது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, கடம்பத்துார், மணவாள நகர், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியார்

மணவாள நகர்: திருவள்ளூர், மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அதில் கழிவு நீர் கலக்கப்படுவது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, கடம்பத்துார், மணவாள நகர், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியார் பாலம் அருகே, கடலில் கலக்கிறது.
இதில், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் உள்ள கரைப்பகுதி உட்பட, கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முளைத்துள்ளன. மேலும், மணவாள நகர் பகுதியில், திடக்கழிவு மேலாண் திட்டம் மற்றும் கழிவு நீர் கால்வாயும் முறையாக செயல்படுத்தாததால், கூவம் ஆற்றிலேயே, கழிவு நீரும், குப்பையும் சேகரமாகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதே போல், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து எடுக்கப்படும் 'செப்டிங் டேங்க்' கழிவுகளும், கூவம் ஆற்றிலேயே தனியார் லாரிகள் மூலம் விடப்படுகிறது. எனவே, கூவம் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பை மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூரில் மட்டுமின்றி, கூவம் ஆறு ஓடும் வழித்தடம் முழுவதிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற வேண்டும் எனவும், கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X