சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: துணை பதிவாளர் கைது

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாதவரம்: மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை பதிவாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கினர்.சென்னையைச் சேர்ந்த ஒருவர், மாதவரத்தில் உள்ள இடத்திற்கு பத்திரப்பதிவு செய்தார். அதற்கான ஆவணத்தை விடுவிக்க, மாதவரம் சார் - பதிவாளர் அலுவலக துணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி 44, என்பவர், இளநிலை உதவியாளர் சுதாகர் 39, என்பவர் மூலம், 10 ஆயிரம் ரூபாய்

மாதவரம்: மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை பதிவாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கினர்.
சென்னையைச் சேர்ந்த ஒருவர், மாதவரத்தில் உள்ள இடத்திற்கு பத்திரப்பதிவு செய்தார். அதற்கான ஆவணத்தை விடுவிக்க, மாதவரம் சார் - பதிவாளர் அலுவலக துணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி 44, என்பவர், இளநிலை உதவியாளர் சுதாகர் 39, என்பவர் மூலம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து, அந்த நபர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்களது ஆலோசனைப்படி, சுதாகரிடம் பணம் கொடுத்தார். அவர் அதை, துணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையிலான போலீசார், அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-ஜூலை-202109:09:34 IST Report Abuse
அசோக்ராஜ் சைதாப்பேட்டை சிவப்ரியாவை ஃபாலோ பண்ணத் தெரியாம பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்ளோ சீப்பா மாட்டிக்கிட்டானே?
Rate this:
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
28-ஜூலை-202106:16:26 IST Report Abuse
Ramanujam Veraswamy No official directly get corrupt money directly from the public. They do so only through agents viz document writers in Registration Dept, Driving Schools in Road Transport Offices etc. This universal fact.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X