சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி விஜயபாஸ்கருக்கு பணம் சென்றதா? தனியார் நிறுவன ஆலோசகர் ஆபீசில் சோதனை!

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஆலோசகர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர், இவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொத்து குவிப்பு வழக்கு பதிவு

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஆலோசகர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர், இவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர்.2.50 கோடி ரூபாய்அமைச்சராகும் முன், விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 2.50 கோடி ரூபாய்; அமைச்சரான பின், 8.60 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

அதில், 2.68 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில், ஒளிரும் பட்டைகள் மற்றும் நவீன கருவிகள் உள்ளிட்டவை பொருத்துவதற்கான 23 கோடி ரூபாய் டெண்டரை, 900 கோடி ரூபாய் வரை உயர்த்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.


பண பரிவர்த்தனை

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணையை முடுக்கி விட்டனர். கடந்த 22ம் தேதி, சென்னை மற்றும் கரூரில், விஜயபாஸ்கர், அவருடன் தொடர்புடையோரின் வீடு, அலுவலகங்கள் என, 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள, 'டெடி இந்தியா பிரைவேட் லிமிடட்' நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிறுவனம், போக்கு வரத்து துறையோடு, 'ஸ்டிக்கர், சிசிடிவி' கருவிகள் உள்ளிட்டவை பொருத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துஉள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஆலோசகரான ரவிக்குமார், சென்னை அண்ணா நகரில் நடத்தி வரும் அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், திடீர் சோதனை நடத்தினர்.

போக்குவரத்து துறைக்கு பொருட்களை 'சப்ளை' செய்த நிறுவனங்கள் வாயிலாக, அமைச்சருக்கு பணம் சென்றதா என, கண்டறிய இந்த சோதனை நடந்தது.ரவிக்குமார் அலுவலகத்தில், மூன்று மடிக்கணினிகள், சொத்து பத்திரங்கள், வங்கி பண பரிவர்த்தனைக்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X