பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை துறைமுகத்தில் நிதி மோசடி:மூன்று இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை துறைமுக வங்கி கணக்கில் 45 கோடி ரூபாய் வரை நடந்த மோசடி தொடர்பாக, வங்கி மேலாளர், தரகர் வீடுகள் உட்பட மூன்று இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை துறைமுக நிர்வாகம், கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில், 500 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியது. வைப்புத் தொகை செலுத்திய மூன்று நாட்களில், 100 கோடி ரூபாய், இரு வேறு நடப்பு கணக்குகளுக்கு

சென்னை:சென்னை துறைமுக வங்கி கணக்கில் 45 கோடி ரூபாய் வரை நடந்த மோசடி தொடர்பாக, வங்கி மேலாளர், தரகர் வீடுகள் உட்பட மூன்று இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை துறைமுக நிர்வாகம், கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில், 500 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியது. வைப்புத் தொகை செலுத்திய மூன்று நாட்களில், 100 கோடி ரூபாய், இரு வேறு நடப்பு கணக்குகளுக்கு மாற்றப்பட்டன.கணேசன் என்பவர், துறைமுக துணை இயக்குனர் எனக் கூறி, போலி ஆவணங்கள் வாயிலாக பண பரிமாற்றம் செய்துஉள்ளார்.

இந்த பண பரிமாற்றத்தில், 45 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துஉள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து, துறைமுக அதிகாரிகள் அளித்த புகாரில், இந்தியன் வங்கி அதிகாரி சேர்மதி ராஜா, துறைமுக அதிகாரி போல மோசடி செய்த கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இந்த மோசடியில், இந்தியன் வங்கி மற்றும் துறைமுக நிர்வாகத்தில் உள்ள யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, தரகர் மணிமொழி, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் வீடுகள் உட்பட மூன்று இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், திடீர் சோதனையை துவக்கினர்.

இரவிலும் சோதனை நீடித்தது. சோதனை முடிவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்கள் வெளியாகும் என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X