அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், 2016ல் நிறைவுஅடைந்தது. அதன்பின், தேர்தல் நடத்தப்படாமல் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்; 2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் தாய் மாவட்டங்கள் என, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.இம்மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்

சென்னை:தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், 2016ல் நிறைவுஅடைந்தது. அதன்பின், தேர்தல் நடத்தப்படாமல் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்; 2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் தாய் மாவட்டங்கள் என, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இம்மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, செப்.,15க்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. முதலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடர்பாக, அரசு தரப்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X