அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையில் கழிவு நீரால் அவதி 

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, அண்ணா நகர் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏமப்பேர் ஏரியில் கலக்கும் வகையில் அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையின் இருபுறங்களிலும் கால்வாய்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, அண்ணா நகர் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏமப்பேர் ஏரியில் கலக்கும் வகையில் அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையின் இருபுறங்களிலும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் துார்ந்ததால், கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், சாலை படுமோசமாக உள்ளதாலும், கழிவு நீர் தேங்கி இருப்பதாலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X