படகு விபத்து: 57 அகதிகள் உயிரிழப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கெய்ரோ:வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்தனர்.ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வோர் அமைப்புக்கான சர்வதேச செய்தி தொடர்பாளர் ஷபா மிஷெலி கூறியதாவது:ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்றனர். அப்போது அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து

கெய்ரோ:வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்தனர்

.ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வோர் அமைப்புக்கான சர்வதேச செய்தி தொடர்பாளர் ஷபா மிஷெலி கூறியதாவது:ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்றனர். அப்போது அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.

லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சி நகரில் இருந்து சமீபத்தில் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த 75 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது.நேற்று முன்தினம் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்த 18 பேரை மீனவர்களும், கடற்படையினரும் மீட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X