கேட்பாரற்ற ரூ.49,000 கோடி பார்லி.,யில் அமைச்சர் தகவல்| Dinamalar

கேட்பாரற்ற ரூ.49,000 கோடி பார்லி.,யில் அமைச்சர் தகவல்

Added : ஜூலை 28, 2021
Share
புதுடில்லி:“வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 49 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது,” என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறினார்.மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத தொகை

புதுடில்லி:“வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 49 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது,” என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத தொகை 24 ஆயிரத்து 356 கோடி ரூபாய். அதே காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 24 ஆயிரத்து 586 கோடி ரூபாய் கோரப்படவில்லை.

வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 48 ஆயிரத்து 942 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளது.ரிசர்வ் வங்கி டி.இ.ஏ.எப்., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற திட்டத்தை 2014ல் துவக்கியுள்ளது. வங்கிகளில் கோரப்படாத தொகை, டி.இ.ஏ.எப்., நிதிக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 10 ஆண்டு களுக்கு மேல் கோரப்படாத தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X