சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திடீரென பூட்டப்பட்ட நேதாஜி மைதானம்: மக்கள் அதிர்ச்சி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நேதாஜி மைதானம் திடீரென பூட்டப்பட்டதால், நடை பயிற்சி மற்றும் விளையாட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1854ம் ஆண்டு ஆங்கிலேயரால் 'போர்டு ஸ்கூல்' துவங்கப்பட்டது. அப்போது, மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை மேம்படுத்தும் வகையில், நகரின் மத்தியில், 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது.பின்னர் கொடையாளர்களால், சுற்றிலும்
 திடீரென பூட்டப்பட்ட நேதாஜி மைதானம்: மக்கள் அதிர்ச்சி

உடுமலை:உடுமலை நேதாஜி மைதானம் திடீரென பூட்டப்பட்டதால், நடை பயிற்சி மற்றும் விளையாட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1854ம் ஆண்டு ஆங்கிலேயரால் 'போர்டு ஸ்கூல்' துவங்கப்பட்டது. அப்போது, மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை மேம்படுத்தும் வகையில், நகரின் மத்தியில், 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது.பின்னர் கொடையாளர்களால், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இந்த நேதாஜி விளையாட்டு மைதானத்தில், நடை பயிற்சி மேற்கொள்ள நடை பாதை, கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி பிரிவுகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.பள்ளி தொலைவில் உள்ளதால், பெரும்பாலும் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆண்கள், பெண்கள் என உடுமலை நகரின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் நடை பயிற்சிக்கு வருவதோடு, இளைஞர்கள், சிறுவர்கள் என தினமும், பல ஆயிரக்கணக்கானவர்கள் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மைதானத்தில், தனியார் அமைப்புகளால் விளையாட்டு பயிற்சிகளும், பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும், கட்டணம் வசூல் செய்து கொண்டு வணிக ரீதியாக பயன்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.இதனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த, விளையாட்டு மைதானம் நேற்று திடீரென பூட்டப்பட்டதால், நடை பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் கூறியதாவது:நேதாஜி விளையாட்டு மைதானம் பள்ளிக்கு சொந்தமானது என்றாலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், புதர் மண்டாமல், பாதுகாப்பாக இருக்கும் என்பதால் திறந்து விடப்பட்டுள்ளது.பராமரிப்புக்கு என அரசு சார்பில் தொகை வழங்கப்படுவதில்லை. அங்கு வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடர் புகார் மற்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால், பிரச்னை உருவாகாமல் இருக்க, பூட்டப்பட்டது.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X