பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: திருவள்ளூர்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மோசடி வாலிபர் சிக்கினார்திருவள்ளூர்: திருநின்றவூர், நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் மகன் பார்த்தசாரதி, 21. கடந்த ஆண்டு, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு எழுதியுள்ளார். இவரிடம், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அசோகன் மகன் அரவிந்தன், 25, அணுகி, 'காவலர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை; எனவே, மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி

மோசடி வாலிபர் சிக்கினார்
திருவள்ளூர்: திருநின்றவூர், நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் மகன் பார்த்தசாரதி, 21. கடந்த ஆண்டு, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு எழுதியுள்ளார். இவரிடம், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அசோகன் மகன் அரவிந்தன், 25, அணுகி, 'காவலர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை; எனவே, மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி கொடுக்கிறேன்' எனக்கூறி, 4.67 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.ஆனால், வேலை கிடைக்காததால்பாதிக்கப்பட்ட பார்த்தசாரதி, திருவள்ளூர் எஸ்.பி.,யின் பிரத்யேக தொலைபேசி எண், '63799 04848'ல் புகார் அளித்தார். எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, விசாரணை நடத்தி, அரவிந்தனை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயில் வீடு நாசம்

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 38. இவரது கூரை வீடு மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த 'டிவி' மற்றும் மின்விசிறி, 4 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், 24,500 ரூபாய், அரசு அட்டைகள் தீயில் கருகின.

மின்சாரம் பாய்ந்து பசுக்கள் பலி

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூரில், பெய்த கன மழை மற்றும் காற்றால், தாங்கல் ஏரியின் மையப் பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்தது. இந்நிலையில் தொழுதாவூர் பகுதியில் இருந்து, இரண்டு பசுக்கள் மேய்ச்சலுக்காக ஏரிக்கு சென்ற நிலையில், அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இறந்தன.

ஆயுதங்களுடன் திரிந்தோர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் பூங்கா பகுதியில், நாட்டு வெடிகுண்டுடன் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்திரிந்த நான்கு பேரை, மறைமலை நகர் போலீசார் பிடித்தனர். விசாரணை செய்ததில், திருக்கச்சூர் முத்துச்சாமி, 22, கிஷோர், 20, அழகேசன், 26, கொளத்துார் சிவன்குமார், 20, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் அழகேசன், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வந்ததை அறிந்து அவர் உட்பட நால்வரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

லாரி மோதி பெண் பலி

காஞ்சிபுரம்: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மலு மனைவி நாதமுனி, 34. குவைத்தில் வேலை பார்த்து வந்தார். விமானம் மூலம், சென்னை வந்த அவரை அழைத்துச் செல்ல, குடும்பத்தினர் காரில் சென்றனர். சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, காஞ்சிபுரம் அடுத்த துலங்கும் தண்டலம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க காரிலிருந்து இறங்கினார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் கார் சேதம்: 3 பேர் காயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில், திருக்கழுக்குன்றம் நோக்கிச் சென்ற, 'சுசூகி டிசையர்' கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரம், சிற்பக் கூட பெயர்பலகை ஆகியவற்றில் மோதி, முன்புறம் உருக்குலைந்தது. காரில் சென்ற நபர், சிற்பக்கூட ஊழியரான குழிப்பாந்தண்டலம் காமராஜ், சாலையில் சென்ற பெண் ஆகியோர் காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X