பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... அ.தி.மு.க., ஆலோசனை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''சட்டசபை தேர்தலில், 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம். சட்டசபை தேர்தல் முடிவு, கட்சிக்கு தோல்வியல்ல; சிறு சறுக்கல். எதிர்காலத்தில் சறுக்கல் இல்லாமல் வெற்றியை

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''சட்டசபை தேர்தலில், 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம். சட்டசபை தேர்தல் முடிவு, கட்சிக்கு தோல்வியல்ல; சிறு சறுக்கல். எதிர்காலத்தில் சறுக்கல் இல்லாமல் வெற்றியை பெறுவோம்,'' என்றார். அமைப்பு செயலாளர் சிவசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குணசேகரன், ஜெ., பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் உட்பட பலர் பேசினர்.

குழாய் உடைந்து குடிநீர் வீண்
வெள்ளகோவில், திருச்சி என்.எச்., ரோடு, கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாயில் செல்கிறது. தார் ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் சாலையில் செல்லும் கனரக வாகனத்தின் அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் சரிசெய்து குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாரி உரிமையாளர் கவலை
வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் இயங்கிவரும் லாரிகளுக்கு டீசல் விலை உயர்வால் போதிய வாடகை இல்லை என லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'டீசல் விலை லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தும், லாரிகள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் வாடகை, வரை உயர்ந்தும் போதுமான அளவு வாடகை உயர்த்தப்படவில்லை. பழைய வாடகையே தருவதால், தொழில் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால், டிரைவர்களுக்கும் பேட்டா கிடைக்காததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

விழிப்புணர்வு கூட்டம்
வெள்ளகோவில், முத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க கூடாது என வலியுறுத்தி, காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் விற்றால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்தார். வெளியூரிலிருந்து மொத்த வியாபாரிகள் கொண்டு வந்து விற்றால் தகவல் தருமாறு போலீசார் கேட்டு கொண்டனர். கூட்டத்தில் மளிகைக்கடை வியாபாரிகள், பெட்டிக்கடை, டீக்கடை உரிமையாளர்கள் பங்கேற்று, 'இனிமேல் குட்கா விற்க மாட்டோம்,' என உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X