இனி ஒரு விதி செய்வோம்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி ஒரு விதி செய்வோம்...

Added : ஜூலை 28, 2021
Share
திருப்பூர்:பசுமையை பெருக்கும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்க்க ஏ.வி.பி., கல்வி குழும மாணவ, மாணவியரும் முன்வந்துள்ளனர்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஒவ்வொரு நபரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது நினைவு அஞ்சலி கூட்டத்தில், திருப்பூர் தொழில்துறையினர் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டம், 2015ல்
 இனி ஒரு விதி செய்வோம்...

திருப்பூர்:பசுமையை பெருக்கும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்க்க ஏ.வி.பி., கல்வி குழும மாணவ, மாணவியரும் முன்வந்துள்ளனர்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஒவ்வொரு நபரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது நினைவு அஞ்சலி கூட்டத்தில், திருப்பூர் தொழில்துறையினர் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டம், 2015ல் துவக்கினர்.அத்திட்டத்தில், ஆறு ஆண்டுகளில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தரிசு நிலமாக கிடந்த பகுதிகள், இன்று பசுமை பொங்கும் குறுங்காடுகளாக மாறியுள்ளன. நேற்று அப்துல்கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில், ஏ.வி.பி., அறக்கட்டளை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர் குழுவினர், கிளாசிக் அவென்யூவில் உள்ள, 'வனத்துக்குள் திருப்பூர்' நர்சரியை நேற்று பார்வையிட்டனர்.கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு மாணவரும் ஐந்து மரக்கன்றுகளையாவது நட வேண்டுமென உறுதியேற்றனர். வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், திட்ட இயக்குனர் குமார் துரைசாமி திட்டத்தின் நோக்கத்தை விளக்கினர்.மரம் வளர்ப்பு திட்டத்தை கேட்டறிந்த, ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன், ''அடிப்படை கல்வியில் துவங்கி, பிளஸ் 2 வரை பயிலும் காலங்களில், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாணவரும், தலா ஒரு மரக்கன்று வளர்ப்பிற்கான பங்களிப்பை செலுத்துவர்,'' என அறிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X