மணவாள நகர் பகுதி கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்ரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணவாள நகர் பகுதி கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்ரமிப்பு

Added : ஜூலை 28, 2021
Share
மணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்குள்ளாவதும், கழிவு நீர்கலப்பதும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம்,கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக,

மணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்குள்ளாவதும், கழிவு நீர்கலப்பதும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம்,கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.
இதில், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில், கூவம் ஆற்றின் இருபுறமும் உள்ள கரைப்பகுதி உட்பட கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உருவாக்கி உள்ளனர். மேலும் மணவாள நகர் பகுதியில், திடக்கழிவு மேலாண் திட்டம் மற்றும் கழிவு நீர் கால்வாயும் முறையாக செயல்படுத்தாததால் கூவம் ஆற்றிலேயே கழிவு நீரும், குப்பையும் சேகரமாகிறது.
இதேபோல், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து எடுக்கப்படும் 'செப்டிங் டேங்க்' கழிவுகளும், கூவம் ஆற்றிலேயே தனியார் லாரிகள் மூலம் விடப்படுகிறது. எனவே, கூவம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பை மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணவாள நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து, அரசுக்கு தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூரில் மட்டுமின்றி, கூவம் ஆறு ஓடும் வழித்தடம் முழுவதிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற வேண்டும்எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X