சில வரி செய்திகள்... குழாய் உடைந்து குடிநீர் வீண்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
வெள்ளகோவில், திருச்சி என்.எச்., ரோடு, கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி, சாக்கடை கால்வாயில் செல்கிறது. தார் ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் சாலையில் செல்லும் கனரக வாகனத்தின் அழுத்தம் தாங்காமல், உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக குடிநீர்

வெள்ளகோவில், திருச்சி என்.எச்., ரோடு, கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி, சாக்கடை கால்வாயில் செல்கிறது. தார் ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் சாலையில் செல்லும் கனரக வாகனத்தின் அழுத்தம் தாங்காமல், உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு வீணாகி வருகிறது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் சரிசெய்து குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.கலாம் நினைவு நாள்திருப்பூர் 'நிட்மா' சங்கத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 6ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் ரத்தினசாமி தலைமையில், நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாம் படத்துக்கு மலர் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், செயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கிருஷ்ணசாமி, அருள்குமார், பத்மநாதன், ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, 'மரக்கன்று வளர்ந்து, அவரின் கனவை நனவாக்குவோம்' என உறுதிமொழி ஏற்கப்பட்டது.மரக்கன்று நடவுமறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, சேவூர் அருகேயுள்ள பாப்பாங்குளம் ஊராட்சி, முதலிபாளையம் கிராமத்திலுள்ள குளத்தில், 'பசுமை இயக்கம்' சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. விஜய், தீபா ஆகியோர் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முதலிபாளையம் கிராம மக்கள், ஆர்வமுடன் மரக்கன்று நட்டனர். பங்கேற்ற பொதுமக்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பல பகுதிகளிலும் மரக்கன்று நட்டு பசுமையை பேணிக்காப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.கொ.மு.க., ஆலோசனைதிருப்பூர் கிழக்கு மண்டல கொ.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு மண்டல தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சந்திரசேகரன், துணை தலைவர் கோவிந்தசாமி சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீரன் சின்னமலை நினைவு நாள் விழாவை வரும் ஆக., 3 ம் தேதி, நகரம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இளைஞர் அணி செயலளர் குணசீலன் நன்றி கூறினார்.அ.தி.மு.க., கூட்டம்திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''சட்டசபை தேர்தலில், 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம். சட்டசபை தேர்தல் முடிவு, கட்சிக்கு தோல்வியல்ல; சிறு சறுக்கல். எதிர்காலத்தில் சறுக்கல் இல்லாமல் வெற்றியை பெறுவோம்,'' என்றார். அமைப்பு செயலாளர் சிவசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குணசேகரன், ஜெ., பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் உட்பட பலர் பேசினர்.லாரி உரிமையாளர் கவலைவெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் இயங்கிவரும் லாரிகளுக்கு டீசல் விலை உயர்வால் போதிய வாடகை இல்லை என, லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'டீசல் விலை லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தும், லாரிகள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் வாடகை, போதுமான அளவு உயர்த்தப்படவில்லை. பழைய வாடகையே தருவதால், தொழில் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால், டிரைவர்களுக்கும் பேட்டா கிடைக்காததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.விழிப்புணர்வு கூட்டம்வெள்ளகோவில், முத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க கூடாது என வலியுறுத்தி, காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் விற்றால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்தார். வெளியூரிலிருந்து மொத்த வியாபாரிகள் கொண்டு வந்து விற்றால் தகவல் தருமாறு போலீசார் கேட்டு கொண்டனர். கூட்டத்தில் மளிகைக்கடை வியாபாரிகள், பெட்டிக்கடை, டீக்கடை உரிமையாளர்கள் பங்கேற்று, 'இனிமேல் குட்கா விற்க மாட்டோம்,' என உறுதிமொழி ஏற்றனர்.குழாய் பதிக்கும் பணிபொங்கலுார் ஊராட்சி பகுதிகள், திருப்பூரின் புறநகர் பகுதியாக மாறி வருவதால் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து உள்ளது. இப்பகுதிக்கு அத்திக்கடவு குடிநீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதுவரை நிலத்தடி நீரை நம்பியே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான அளவு அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால், அடிக்கடி மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. வரும் காலங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு, எல் அன்ட் டி திட்டம் மூலம் ஊராட்சிகள் குடிநீரை பெற முயற்சி எடுத்துள்ளன. இதற்காக, பொங்கலுார் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X