பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு ஆபீசில் மேடை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பல்லடம்:தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு பணிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. அதனால், பதிவாளர்களுக்கு பணத்தை கையாளும் பணி இல்லாதால், உயர்ந்த மேடை தேவையில்லை என, முடிவு செய்யப்பட்டது.பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது இதனை உறுதி செய்து, மேடைகளை அகற்ற

பல்லடம்:தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு பணிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. அதனால், பதிவாளர்களுக்கு பணத்தை கையாளும் பணி இல்லாதால், உயர்ந்த மேடை தேவையில்லை என, முடிவு செய்யப்பட்டது.பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது இதனை உறுதி செய்து, மேடைகளை அகற்ற உத்தரவிட்டார். இது குறித்து, பதிவுத்துறை தலைவரும், சுற்றறிக்கை அனுப்பினார். இதை தொடர்ந்து, பத்திரப் பதிவு அலுவலகங்களில் மேடை அகற்றும் பணி நடந்து வருகிறது.அவ்வகையில், பல்லடத்தில் உள்ள அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக, மேடை இடித்து அகற்றப்பட்டது. இதனால், பத்திர பதிவாளர்கள் இருவரும், நேற்று முதல் சமதளத்தில் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற துவங்கினர்.பொதுமக்கள் கூறுகையில், 'பத்திரப்பதிவு அலுவலகங்களில், சார்-பதிவாளர்கள் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு பணியாற்றுவதை மாற்றி, மேடை இடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X